அமைச்சரின் பெயரை பயன்படுத்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பல்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம்*
தனது பெயரை பயன்படுத்தி அல்லது தமது சகோதரர், உறவினர், அல்லது பணிக்குழாமின் அதிகாரி என கூறிக்கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பணம் வசூலிக்கும் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான மோசடி நபர்களுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணப் பரிமாற்றல் அல்லது உறுதிமொழிக்கும் தாம் பொறுப்பல்ல. அவ்வாறான எந்தவொரு கொடுக்கல் வாங்கலிலும் தமக்கு தொடர்பில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அல்லது அமைச்சின் பணிக்குழாமைச்சேர்ந்த எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தும் நடவடிக்கைகளுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்கு அனுப்புவதாகக் தெரிவித்து , நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதற்கான கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில் அமைச்சர் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன் , மோசடிகாரர்களுக்கு அமைச்சரின் எந்தவித தயவு தாட்சணியம் கிட்டாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் சட்ட ரீதியிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களால் மாத்திரமே முடியும் என்பதினால் இந்த நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவித்துக்கொள்கின்றேன்.