பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவித்தல்

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவித்தல்

சாதாரண தர பரீட்சை இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களிலும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 10 மத்திய நிலையங்களில், முதற்கட்டமாக 9 பாட விதானங்களுக்கான மதிப்பீடு பணிகள் இடம்பெற்றன.

அந்தப் பணிகள் மே மாதம் 14ஆம் திகதி நிறைவுசெய்யப்பட்டன.

அதன் பின்னர், கடந்த 19 ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் உள்ள 35 மத்திய நிலையங்களில், 11 பாட விதானங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அந்தப் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

எனவே, 31 ஆம் திகதியாகும்போது 20 பாட விதானங்களுக்கான, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதத்திற்குள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை பெரும்பாலும் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்த பின்னர், செயல்முறை பரீட்சைகளை நடத்த எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image