அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தகவல் வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்குள் இந்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பிரதேச செயலகங்களில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாகவும், தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் கணக்கெடுப்பில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், கட்டப்படும் வீடுகளின் வகைகள், கட்டப்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட உள்ளன.
அதன் பின்னர் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கும் அரசாங்கத்திற்கும் சொந்தமான காணிகளை பயன்படுத்தி வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி புலம்பெயர் பணியாளர்களுக்கான வீட்டுத்திட்டம்
மேலும் செய்தி அதிபர், ஆசிரியர்களின் வங்கிக் கடனுக்கான வட்டி அதிகரிப்பு