பொதுநிர்வாக அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக

பொதுநிர்வாக அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக

பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பொது நிர்வாக அமைச்சின் செயலாளராக முன்னர் செயற்பட்ட நீல் பண்டார ஹப்புஹின்ன அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

இதனையடுத்து, பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் செயலாளர் பதவிக்காக வெற்றிடம் நிலவியது.

 

அந்த வெற்றிடத்திற்கே கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image