தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்துக்கு காலக்கெடு

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்துக்கு காலக்கெடு

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஏப்ரல் மாதத்தின் முதலாம் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.அந்த சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நாளைய தினத்துக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image