வட்டவளை ஆடைத்தொழிற்சாலை பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களினால் கடந்த நாட்களாக முன்னெடுக்க வந்த பணி புறக்கணிப்பு போராட்டம் நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியைடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவத்துள்ளது

கடந்த வருடங்களில் வழங்கியது போன்று இவ் வருடமும் போனஸ் கொடுப்பனவை வழங்கவேண்டுமென வலியுறுத்தியே வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமக்கு வழமையை போன்று போனஸ் வழங்குவதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்து சிறிய தொகை ஒன்றை வழங்குவதாக அறித்துள்ளதாகவும் எனவே தமக்கு முழுமையான போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், எம்.பியுமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இ.தொ.கா பிரதிநிதிகள் வட்டவளை ஆடைத்தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை (28) சென்று தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக தரப்பினருடன் அவர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சம்பள உயர்வு அவசியம், போனஸ் வழங்கப்பட வேண்டும், தற்போது வழங்கப்படும் உணவு மாற்றப்பட வேண்டும், சில மேற்பார்வையாளர்களின் செயற்பாடுகள் மோசமாக உள்ளன என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.

இதற்கு உணவு மாற்றம், மேற்பார்வையாளர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு நிர்வாக தரப்பில் சாதக பதில் வழங்கப்பட்டுள்ளது. போனஸ் தொடர்பில் மேலிடத்தில் கதைத்துவிட்டு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், பணி புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்ற நாட்களுக்கும் சம்பளம் வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் நிர்வாக தரப்பில் இருந்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு வழமையாக பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிக்கப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com