20 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

20 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

இன்று (29) கடமைக்கு சமுகமளிக்காத 20க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 
இன்று காலை கொழும்பில் உள்ள அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், இன்று பணிக்கு சமுகமளிக்காத 20 இற்கும் மேற்பட்ட  பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைய அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கக் குழுக்கள் நேற்று முதல் எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோகம் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தன.
 
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்  மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகிய இரு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் பட்சத்தில் அல்லது ஏனைய ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தால் அவர்களை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image