பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை!

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை!

எரிபொருள் விநியோகம் மற்றும் சேவையை முன்னெடுக்கவிடாமல் இடையூறு விளைவித்த தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஊழியர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக பெற்றோலியக்கூட்டுத்தாபன தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகம் மற்றும் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் சேவை வளாகங்களுக்குள் பிரவேசிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து அதிகாரிகளும் சேவைக்கு வருகைத் தந்து எரிபொருள் விநியோக நடவடிக்கை மற்றும் ஏனைய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Petroliam

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image