அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மட்டுமே ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மட்டுமே ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அரசாங்க பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இனைத்துக் கொள்வதற்கான தற்போது அரசாங்கத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

தற்போது அரச சேவையில் கடமையாற்றும் பட்டதாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக வரத்தமாணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்திற்கு ரூபா 2700.00 பரீட்சை கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என்பதோடு பரீட்சையில் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே நேர்முகப் பரீட்சை நடைபெற்று நியமணங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டதாரி ஆசிரிய வெற்றிடங்களுக்கு சாதாரண அதாவது தற்போது அரச சேவையில் இல்லாத பட்டத்தாரிகள் விண்ணப்பிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே உரிய வர்த்தமானியில் தரப்பட்டுள்ள அறிவுத்தல்களை முறையாகவும் தெளிவாகவும் வாசித்து அதன் அடிப்படையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகொள் விடுக்கின்றனர்.

அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள் விண்ணப்பிக்குமிடத்து அவர்களுக்கான பரீட்சை அட்டை கிடைக்கப்பெறாததுடன் அவர்கள் செலுத்திய பரீட்சை கட்டணமாக ரூபா 2700.00யும் மீளப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image