வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தற்காலிகமாக சமரசம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தற்காலிகமாக சமரசம்
*வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை ஊழியர்களின் புரிந்துணர்வுடன் தற்காலிகமாக சமரசம் செய்ய முடிந்ததாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
வருட இறுதி போனஸ் செலுத்துவதற்காக இதுவரை அனுமதி கிடைக்காமை காரணமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை நிலை ஓரளவு  கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்ததாகவும் குறிப்பாக கொரியா உட்பட வெளிநாடுகளில் தொழில் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாததால், ஊழியர்களின் புரிதலின் ஊடாக தற்காலிகமாக நிலைமையை கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமாகியதாகவும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடி விரைவாக தீர்மானம் எடுப்பதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அனுராதபுரத்தில் நேற்று (12) தெரிவித்தார்.
 
 
வருடாந்த போனஸ் செலுத்துவது தாமதித்ததன் காரணமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்பட்ட ஊழியர்களின் அமைதியின்மை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
 
பொதுவாக அவர்களுக்கு போனஸ் கிடைக்க வேண்டும். அந்த நிறுவனம் லாபமீட்டி இருக்கிறது. வருட இலக்கை பூரணப்படுத்தி இருக்கின்றது. லாபம் இல்லாமல் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் சில நிறுவனங்கள் வழங்கி இருக்கும்போது சமத்துவமற்ற முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அவர்கள் மத்தியில் சற்று கொந்தளிப்பான நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் தற்போதைக்கு நிலைமையை ஒரளவு சமரசம் செய்ய முடியுமாகியது. நிதி அமைச்சுடன் கலந்துரையாடி இந்த  பிரச்சினையை தீர்ப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.
 
இந்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது தடைப்பாட்டால், கொரியா போன்ற நாடுகளுக்கு செல்ல இருப்பவர்களின் ஒப்பந்தம் ரத்தாகி வெளிநாட்டுக்கு செல்ல இருக்கும் விடயங்கள் நின்றுவிட்டால், அந்த நிறுவனங்களில் பணிகள் நிறுத்தப்பட்டு அங்கு பாரிய பாதிப்பு மற்றும் நட்டம் ஏற்படுகிறது. அதனால் இதுதொடர்பாக நாங்கள் மிக விரைவாக தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்க்கின்றோம். இவர்கள் அரசாங்கத்துக்கு பணம் சம்பாதித்து கொடுக்கின்றனர். என்றாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image