பொது முகாமையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள்

பொது முகாமையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரின் அலுவலகம், அதன் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

 

 
கடந்த ஆண்டு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதன் ஊழியர்கள் குறித்த அலுவலகத்தை சுற்றுவளைத்தனர்.
 
2022ஆம் ஆண்டு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது பணியகத்தினால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய உரிய ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதில் நிர்வாகத்திற்கு எந்த சிக்கலும் இல்லை எனவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இது தொடர்பில் பணியகத்தின் பொது முகாமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு இடையில் இது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும், எதிர்வரும் சில தினங்களில் சாதகமான தீர்வு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் உறுதியளித்ததையடுத்து, ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image