விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பிலான மனு விசாணைக்கு!
கட்டாய ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வலுவிழக்க செய்வதற்கான ரிட் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்துள்ளது.
176 விசேட வைத்திய நிபுணர்களினால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகள் மேன்முறையீட்டு நீதிபதிகள் அடங்கிய குழுவினர் இம்மனு ஆராய்ந்து பார்த்துள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி உரிய தகவல்களை வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 17ம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வுபெறும் வயதை 60ஆக குறைப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.