இலகு ஆடை சுற்றறிக்கை ஆசிரியைகளுக்கு பொருந்தாதா? பொதுநிர்வாக அமைச்சு விளக்கம்

இலகு ஆடை சுற்றறிக்கை ஆசிரியைகளுக்கு பொருந்தாதா? பொதுநிர்வாக அமைச்சு விளக்கம்

இலகுவான ஆடைகளை அணிந்து அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு அறிக்கையிடுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஆனால், நேற்று (21) பெண் ஆசிரியைகள் குழுவொன்று இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில், அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னவிடம், வினவியபோது, ​​அரச அலுவலகங்களில் பணிபுரிய வரும் ஊழியர்கள் தொடர்பிலேயே குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள் ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

பெண் ஆசிரியைகளின் ஆடை தொடர்பான தீர்மானம் கல்வி அமைச்சினால் எடுக்கப்படும் எனவும் அது அரச நிர்வாக அமைச்சுக்கு பொருந்தாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மூலம் - அததெரண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image