ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

சேலை அணியாமல் சாதாரண ஆடையில் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்த சில ஆசிரியைகளுக்கு எதிராக கல்வி அமைச்சரின் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆசிரியைகள் பாடசாலைக்கு செல்லும்போது, சேலை அல்லது ஒசரி அணிவதே, சட்ட ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் நீண்ட நாட்களாக தொடர்கின்றது.

 

அந்த நடைமுறையினை சீர்குலைப்பது சில அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவையாக உள்ளது.

 

எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விரைவில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image