பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கை

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கை

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்குக் கடிதமொன்றை கையளித்துள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்தக் கடிதத்தை கடந்த 06 ஆம் திகதி கையளித்தார்.

தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணைக்கு அமைய இதுவரை உரிய 35 அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் 28 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதில் உள்ளடப்பட்டுள்ள பெண் உறுப்பினர் பவித்ரா வன்னிஆரச்சி ஆவார்.

எனவே, தேசிய பேரவையின் ஏனைய அங்கத்தவர்களை பெயர் குறிப்பிடும் போது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இந்தக் கடித்தம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image