4 ஆயிரத்துக்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் .

4 ஆயிரத்துக்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் .

நாடாளாவிய ரதியில் உள்ள பாடசாலைகளில் தற்போதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகான அதிபர் பதவி வெற்றிடம் நிலவுவதாக இலங்கை அதிபர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் பின்னர், அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறாமையால் இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ப்ரேமதிலக்க தெரிவித்துள்ளார்.

வருடாந்த ஆடசேர்ப்பை மேற்கொள்ளுமாறும், இன்றேல் எதிர்காலத்தில் அது பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் கல்வி அமைச்சருக்கும், அமைச்சின் செயலாளருக்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு மத்தியில், தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image