பரீட்சை விடைத்தாள்க.பொ.த உயர்தர மதிப்பீட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குக!

பரீட்சை விடைத்தாள்க.பொ.த உயர்தர மதிப்பீட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குக!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள போதிலும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு இதுவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தேசிய ரீதியில் குறிப்பாக பரீட்சை திணைக்களத்தால் வருடாந்தம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.எனினும், ஒதுக்கப்பட்ட மற்றும் அதற்கேற்ப வழங்குவதற்கென அனுமதிக்கப்படும் கொடுப்பனவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

“தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துள்ள செலவினங்களை நோக்கும் போது வழங்கப்படும் கொடுப்பனவானது எவ்விதத்திலும் போதுமானது அல்ல. பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியிலும் தமது கடமைகளைப் பொறுப்புணர்வுடன் செவ்வனே நிறைவேற்றிய ஆசிரியர்களுக்கு பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் பொறுப்பற்றுச் செயற்படுவது கவலைக்குரியது.

“உரிய ஆசிரியர்களுக்கு உடனடியாக கொடுப்பனவு நிதியை ஒதுக்குமாறும் அவ்வாறு செய்யாதவிடத்து ஒன்றிணைந்த ஆசிரிய சங்கங்களாக இது தொடர்பாக மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image