பெற்றோலிய கூட்டுத்தாபன மறுசீரமைப்பு- எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்

பெற்றோலிய கூட்டுத்தாபன மறுசீரமைப்பு- எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபன மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த சில தொழிற்சங்கங்கள் இன்று (22) எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளன.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தேச மறுசீரமைப்புக்கு எதிர்ப்பதாகவும் அமைச்சரிடம் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதாகவும் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை தாங்கள் மதிக்கிறோம் என்றும் ஆனால் கடனில் மூழ்கியுள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றை அமைச்சர் அண்மையில் நியமித்துள்ளார்.

பெட்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு இந்தக் குழு பணிக்கப்பட்டுள்ளது, அதன்படி, CPC மற்றும் LIOC உடன் பல நிறுவனங்கள் இங்கு பெட்றோலியத் தொழிலில் ஈடுபடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, யார் எதிர்த்தாலும் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாட்டில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image