இலங்கை வங்கி எதிர்நோக்கும் நெருக்கடிக்கு அதன் தலைவரே காரணம் - தொழிற்சங்கம்

இலங்கை வங்கி எதிர்நோக்கும் நெருக்கடிக்கு அதன் தலைவரே காரணம் - தொழிற்சங்கம்

இலங்கை வங்கியின் தலைவரால் கடந்த இரண்டரை வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளினால் இலங்கை வங்கி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

முறைசாரா கடன் வழங்கல் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்து பல ஊழல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக பொறுப்பான தரப்பினருக்கு சங்கம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதுட அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் விசாரணை அறிக்கைகளை வெளியிட்டார்.பிரதம செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்டுள்ள ஏனைய விசாரணைகளின் பிரகாரம் வங்கியில் பல சட்டவிரோதச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என்றார்.

இலங்கை வங்கியின் தலைவரின் சட்டவிரோத ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க சங்கம் தீர்மானித்ததுடன், அதற்கமைவாக கடந்த வாரம் கொழும்பில் சுவரொட்டி பரப்புரையை ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கிக்கு முன்பாக பதாகை ஒன்றைக் காட்சிப்படுத்தியதன் மூலம், தலைவரின் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும் என்று தாம் வலியுறுத்துவதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

தலைவருடைய ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக சங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில் இலங்கை வங்கி கிளைகள் சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் முன்னாள் தலைவர் பாலித அடம்பாவல ஆகியோர் கடந்த 4ம் திகதி மக்கள் போராட்டத்தின் அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டனர்.

தலைவரின் தலையீட்டினால் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் நேர்மையற்ற கரம் இருப்பதாக தொழிற்சங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பும் தொழிற்சங்க தலைவர்களை நசுக்கும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை வங்கியின் தலைவரின் இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவும், அவரை வங்கியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு அதிகாரிகளை வற்புறுத்தவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சி

 

அதன்படி, நடவடிக்கைகளில் ஒன்றாக, இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (15) நன்பகல் 12.30 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி உறுப்பினர்களின் பங்களிப்புடன் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image