நாளை முதல் மின்தடை காலம் அதிகரிப்பு!

நாளை முதல் மின்தடை காலம் அதிகரிப்பு!

நாளை முதல் மின்தடைக் காலம் அதிகரிக்கப்படவுள்ளது.

நாளை (16) முதல் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் 1 மணிநேரம் 40 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், CC பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், M, N ,O, X, Y, Z ஆகிய வலயங்களி காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது.

மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு தொடர்பில் தொழில்நுட்ப குழு ஆராய்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாவது பிறப்பாக்கி செயலிழந்துள்ள காரணத்தினால், நாளை(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் அதிகரிக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செயலிழந்துள்ள மின்னுற்பத்தி நிலைய பிறப்பாக்கியின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவருவதற்கு 14 முதல் 16 நாட்கள் தேவைப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image