கடமைகளிலிருந்து விலகும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

கடமைகளிலிருந்து விலகும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

எரிபொருளை விநியோகிக்கும்போது QR குறியீட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகளிலிருந்து அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  விலகுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி, அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு நேற்று (15) அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

வலுசக்தி மற்றும் மின் சக்தி அமைச்சிற்கும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக காரியங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையை பரிசோதிக்கும் நடவடிக்கையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சுற்றறிக்கைக்கு அமைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறித்த கடமைகளில் ஈடுபடும்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும், அந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கடந்த முதலாம் திகதி கடிதம் மூலம் நாம் அறியப்பட்டுத்தி இருந்தோம். எனினும் அது தொடர்பில் எவ்விதமான கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்காதமைக்கு கவலையையும் கடும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி வெல்லவாய - மொனராகல வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் 12ஆம் திகதி கம்பஹா மீரிகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த விடயத்தில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விலகியுள்ளதாக சந்தன சூரிய ஆராச்சி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 No photo description available.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image