ஒரு ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்தை மாற்றுவதற்கு அனுமதி இல்லை கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு பாடங்களை மாற்றுவதானது ஆசிரிய சமநிலையை இல்லாது செய்யும என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருசில ஆசிரியர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியராக நியமனத்தைப் பெற்று, பின்னர் பட்டம் பெறுகின்றனர். அவர்கள் பின்னர் பட்டம் பெற்ற பாடத்துறைகளை கற்பிக்கின்றனர். உதாரணமாக: ஆரம்பக்கல்வி ஆசிரியராக நியமனம் வழங்கப்பட்டு ஆரம்பக்கல்வி துறைசார் பயிற்சிபெற்ற ஒருவர் பட்டதாரியாகி பின்னர் இடைநிலை, மேல்நிலை வகுப்புகளில் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.
இதனை கல்வித் திணைக்களத்தில் உள்ள சில அதிகாரிகளும் அங்கீகரிக்கின்றனர். அவர்கள் கூறும் காரணம். அவர்கள் பட்டதாரிகளாகிவிட்டனர்.
அதனை விளக்கும் சுற்றறிக்கை இங்கு தரப்படுகின்றது.
01. பட்டதாரியாக நியமனம் பெறும் ஆசிரியர் ஒருவர் அவரது நியமனக் கடிதத்தில் குறிக்கப்பட்ட பாடம் கற்பிக்க முடியும்.
02. கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள் கல்வியியற் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்ட பாடமே நியமனப் பாடமாகும்.
03. தொண்டராசிரியர்களாக, அல்லது உயர்தரத்துடன் போட்டிப் பரீட்சை அல்லது விசேட அடிப்படையில் நியமனம் பெறுவோர் கட்டாயமாக ஆசிரிய பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்யவேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யும்போது எந்தப் பாடத்தில் பயிற்சி பெற்றார்களோ அந்தப்பாடமே அவர்களின் நியமனப் பாடமாகும்.
இதனை விடுத்து ஆசிரியரின் விருப்பம் அதிபரின் விருப்பம் திணைக்கள அதிகாரிகளின் விருப்பம் என்பன நடைமுறைப்படுத்தப்படும்போது ஆசிரிய சமநிலை இல்லாது போகும்.
இதுவே ஆசிரிய பற்றாக்குறைக்கும், மேலதிகத்திற்கும் காரணமாகும் என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சு கடந்த 2019ம் ஆண்டு கல்வியமைச்சு வௌியிட்டுள்ள சுற்றுநிருபம் கீழே தரப்பட்டுள்ளது.