நீதிபதிகள் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் அரச அதிகாரிகள் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாணங்களில் உள்ள பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அடுத்த வாரம் இது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
வழமையான விடயங்கள் தொடர்பில் அவர்கள் சட்டமா அதிபருடன் தொடர்பு கொள்ள முடியும், ஆனால் ஏனைய விடயங்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகவே தெரிவிக்கப்பட வேண்டும்.
நீதித்துறைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் அரச அதிகாரிகள், நீதிச்சேவைகள் ஆணைக்குழு உடனான வழக்கமான தொடர்புகளை மேற்கொள்ளக் கூடாது. நீதித்துறை விவகாரங்களில் தேவை இல்லாமல் தலையிடுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் அமைச்சின் செயலாளர் ஒருவர் பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதிய சம்பவம், இந்த தீர்மானத்தை எடுப்பதில், முக்கிய காரணியாக கருத்திற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
மூலம் - சூரியன் செய்திகள்