பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டத்தின் மூலமாக நீதி கிடைத்துள்ளது. இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டத்தின் மூலமாக நீதி கிடைத்துள்ளது.   இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பின் மூலமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டத்தின் மூலமாக நீதி கிடைத்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

.இலங்கை நீதித்துறை வழங்கிய இந்த தீர்ப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக இது அமைந்துள்ளது அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் கருத்த தெரிவிக்கையில்

இந்த வழக்கை ஒரு காரணமாக காட்டிக் கொண்டு பல பெரந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு கிpடைக்க வேண்டிய பல விடயங்களை பெற்றுக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தன.

இது தொடர்பாக தொழிற்சங்க உறுப்பினர்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் காரியாலயங்களில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அதற்கு அவர்கள் உரிய பதிலை பெற்றுக் கொடுக்காமல் இந்த வழக்கை ஒரு காரணமாக காட்டி தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவற்றை பெற்றுக் கொடுக்க மறுத்து வந்தார்கள்.

ஆனால் இன்று தொழிலாளர்கள் நீதிமன்றத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் பயனாக தொழிலாளர்களுக்கு சார்பாக சட்டம் தனது கடமையை செய்திருக்கின்றது.எனவே இனிமேலும் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்க வழங்க வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

தொழிற்சங்கங்களின் குரலை நெரித்து தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க முடியாத ஒரு நிலைமையை பெருந்தோட்ட கம்பனிகள் ஏற்படுத்தியிருந்தன.அதற்கு காரணமாக அமைந்ததும் இந்த வழக்கே.பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுக்கு சார்பாக வழக்கின் தீர்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள்.

ஆனால் தொழிலாளர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பு நம்பிக்கை அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக அவர்களுக்கு இன்று நீதிமன்றத்தின் மூலமாக நீதி கிடைத்திருக்கின்றது.

எனவே பெருந்தோட்ட கம்பனிகள் இனியும் தாமதிக்காமல் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முன்வருவதுடன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் பெற்றுக் கொடுத்து இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டும்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்றுமே அராஜகத்தில் ஈடபட்டதில்லை.சட்டத்திற்கு எதிராக செயற்பட்டதில்லை.அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவும் சம்பள உயர்விற்காகவும் அகிம்சை வழியிலேயே போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள்.அதற்கு கிடைத்த வெற்றியே இந்த வழக்கின் தீர்ப்பாகும்.

இந்த வழக்கை தொழிலாளர்கள் சார்பாக தாக்கல் செய்தவர்களுக்கும் அவர்களுக்காக குரல் கொடுத்த சட்டத்தரணிகளுக்கும் நீதியை பெற்றுக் கொடுத்த அனைவருக்கும் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி என்பவற்றின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image