குரங்கம்மை தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் இன்று முதல்

குரங்கம்மை தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் இன்று முதல்

இலங்கையில் குரங்கம்மை தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளனரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று (08) தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அன்வர் ஹம்தானி இது தொடர்பில் கருத்து வௌியிடுகையில் உலக சுகாதார அமைப்பின் பரிசோதனை உபகரணங்கள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறித்த பரிசோதனை உபகரணங்கள் இன்று பொரளை சுகாதார பரிசோதனை நிலையம் மற்றும் கண்டி பொது வைத்தியசாலை என்பவற்றுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்காக வரும் நோயாளர் குறித்த நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று சந்தேகமேற்படுமாயின் அதனை பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே இவ்வுபகரணங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடி, மருந்து பற்றாக்குறை போன்றவற்றுக்கு மத்தியில் நோய் தொற்றுள்ளதா என்று கண்டறிவதற்கான இயலுமை நமக்குள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image