தேசிய கொவிட்-19 ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை ஆரம்பிக்குமாறு கோரும் GMOA

தேசிய கொவிட்-19 ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை ஆரம்பிக்குமாறு கோரும் GMOA

வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் ​கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரித்துள்ளதால், நீக்கப்பட்டுள்ள தேசிய கொவிட்-19 ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை மீண்டும் தொடங்குமாறு கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடந்த வாரம் சுகாதார அமைச்சுக்கு கடிதம் எழுதியுள்ளது.

லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் வீதம் அதிகரிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழு கவலையடைந்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் டொக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் கொவிட்-19 தொழில்நுட்பக் குழு மற்றும் கொவிட்-19 ஒருங்கிணைப்பு நிலையத்தை அவசரமாக மீள அழைக்குமாறு சுகாதார அமைச்சுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்."

தென்னிந்தியாவில் குரங்கு அம்மை தொற்றுகள் பதிவாகி வருவதும் ஒருவர் மரணமடைந்துள்ளமையும் கவலையளிப்பதாகவும் அந்நோய் இலங்கையில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்பு கொண்ட போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் நிலைமைக் குறித்து கவலையடைவதுடன் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார் என்றும் டொக்டர் ரத்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

"நாட்டின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது நிபுணர்கள் குழு தயாராகவுள்ளதாகவும் அவர்களின் ஆலோசனைக்கமைய செயற்படுவோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image