உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறும் அவ்வாறு சமூகமளிக்காத தபால் ஊழியர்கள் பணியை விட்டு சென்றதாக கருதப்படுவார்கள் என்றும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
.தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு ஐந்தாவது நாளாகவும் இன்று (02) தொடரும் நிலையில் தபால் மா அதிபர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தபால் ஊழியர் தொழிற்சங்கங்களுக்கு கடிதம் மூலமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் ததெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் மோசமான நிலை காரணமாக அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்களை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் திறக்க தீர்மானிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை கடந்த 26ம் ஆரம்பித்தன.
இத்தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய பரிமாற்ற பிரிவின் வௌிநாட்டு பிரிவில் பெரும் எண்ணிக்கையான பொதிகள் விநியோகிக்கப்படாமல் தேங்கியுள்ளதாகவும் இதனால் சுமார் 20 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.