வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு சேவைகள் மீண்டும் வழமைக்கு

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு சேவைகள் மீண்டும் வழமைக்கு

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழமையான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப்  ஜூன் 30 முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் என கடந்த 29 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு விடுத்திருந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், நேற்று (01) புதிய அறிவித்தல் ஒன்றை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு ஜூலை 04ஆந் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

 

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இதே வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றும்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image