வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் கோவிட் 19 காப்புறுதி (இன்சூரன்ஸ்) வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனவரி மாதத்திலிருந்து சுமார் 350,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களில் 60,000 பேர் மாத்திரமே கடந்த ஆறு மாதங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் அவசர தேவையின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.