இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் (CEBEU) தலைவர் அனில் இந்துருவ மற்றும் இணை செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு இரண்டு மின்சார சபை அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதிலிருந்து இந்த தடை உத்தரவு தடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுப்பதாக மின்சாரசபை எச்சரித்திருந்த நிலையில், இன்று காலை 08 மணி முதல் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மின் கட்டண உயர்வு தொடர்பில் மின்சார சபையின் அறிவித்தல்
மின்சாரசபை தொழிற்சங்கங்கள் - அமைச்சருக்கிடையில் சந்திப்பு
மின்சாரசபை பொறியிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!
எவ்வாறாயினும், இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை தொழிற்சங்கம் கைவிடபட்டது.
மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தங்கள் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்வதாக ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு மதிப்பளிக்கும் வகையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் மின்தடையை தடுக்கும் அதேவேளை வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டது” என தம்மிக்க விமலரத்ன தெரிவித்திருந்தார்.
தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை ஓரளவு கைவிட்ட போதிலும், நாடு முழுவதிலும், குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில், அதிகாலையில் மின்சாரம் தடைப்பட்டது. இந்நிலையில் மின்சாரபை மின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரசபை பொறியிலாளர்களின் சம்பள விவரம்