மின்சாரசபை பொறியிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

மின்சாரசபை பொறியிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

இன்று (08) நள்ளிரவு தொடக்கம் அனைத்து பணிகளிலும் இருந்து விலகிக்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிராக தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளாக அச்சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார்.

2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் மின் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கமைய, மின்சாரத்தை கொள்வனவு செய்யும் போது ஆகக்குறைந்த விலையை குறிப்பிடப்படவேண்டும். அவ்வாறு செய்யவதனூடாகதான் பொது மக்கள் குறைந்த விலையில் மின்சாரத்தை பயன்படுத்த முடியும்.

மின் கட்டண உயர்வு தொடர்பில் மின்சார சபையின் அறிவித்தல்

எனினும் எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள திருத்தப்பட்ட சட்டத்திற்கமைய மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்குள்ள ஆகக்குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதற்குள்ள வாய்ப்புகள் இல்லாதொழிக்கப்படுகிறது. இது மக்களுக்கு நாட்டுக்கும் பாதகமானதான செயலாகும் என்றும் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image