தமது நிறுவனங்களில் லஞ்ச ஊழல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரலெழுப்புவது தொழிற்சங்கங்களின் கடமை -நீதியமைச்சர்

தமது நிறுவனங்களில் லஞ்ச ஊழல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரலெழுப்புவது தொழிற்சங்கங்களின் கடமை -நீதியமைச்சர்

​தத்தமது நிறுவனங்களில் ஊழல், துஷ்பிரயோகங்கள் இடம்பெறுமாக இருந்தால் அதற்கு எதிராக குரலெழுப்புவது தொழிற்சங்கங்களின் கடமைகள் ஒன்று என்று நீதி மற்றும் சிறைச்சாலை அலுவலகள் அமைச்சு விஜயதாச தெரிவித்துள்ளார்.

உத்தேச 21ம் திருத்தச்சட்டம் தொடர்பில் முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கும் நோக்கில் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று (08) நீதியமைச்சரை நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடியபோது அமைச்சர் இவ்வாறு கருத்து வௌியிட்டார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் உத்தேச அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் விளக்கினார்.

இந்தச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடப்பட்டதாகவும், இதுவரை 50க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்வதற்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் எனவும், புதிய அரசியலமைப்பை விரைவில் கொண்டு வர முடியாது எனவும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்காக உத்தேச 21 புதிய அரசியலமைப்பின் ஊடாக கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் கொள்வனவு ஆணைக்குழு என்பன மீள ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிவில் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பான தமது கருத்துக்களை முன்வைத்ததுடன், அவர்களின் கருத்துக்களுக்கு நீதி அமைச்சர் பதிலளித்தார்.

அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இலங்கை தேசிய சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் ஜொஹான் பெரேரா, அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு, வைத்திய சங்கத் தலைவர் ஆய்வக வல்லுநர்கள் சங்கம், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சங்கம், உணவக சங்கம், தேசிய சட்ட மாணவர் சங்கம், ரயில்வே நிர்வாக அதிகாரிகள் சங்கம், தேசிய மக்கள் பேரவை, இலங்கை அரசு அலுவலர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்கள் இலவச சுகாதார சேவைகள் சங்கம், சமகி சேவக சங்கமய ஆகியோர் இணைந்து இருந்தனர்.

Justice Minister1

Justice Minister

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image