அதிபர் - ஆசிரியர் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

அதிபர் - ஆசிரியர் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில அடை யாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்ட போதும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நேற்று வழமைபோன்று இடம்பெற்றதாக கல்வி அமைச்சர்  ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில நேற்று சுகவீன லீவு வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை விடுத்திருந்த போதும் பெருமளவிலான ஆசிரியர்கள் நேற்று கடமைக்கு சமூகமளித்திருந்ததாகவும் அதற்கிணங்க மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது அவர்களுக்கான உரிமையாகும்.எனினும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கவனத்திற் கொண்டு அவர்களைக் கடமைக்கு திரும்புமாறு தாம் அழைப்பு விடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

அதிபர் - ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை - கபில பெரேரா

போராட்டம் 100% வெற்றி: அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு விசேட அறிவித்தல்

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இ.தொ.கா கலந்துரையாடல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image