இம்மாத நிறைவுக்குள் பூஸ்டர் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

இம்மாத நிறைவுக்குள் பூஸ்டர் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

பூஸ்டர் தடுப்பூசியை இம்மாதம் முடிவடைய முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கும் பண்டிகை காலத்தில் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருப்பது கட்டாயம். இதனூடாக புதிய கொரோனா அலை உருவாவதை தவிர்த்துக்கொள்ள முடியும். அத்துடன் இதுவரை கொவிட் தடுப்புக்கான பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக பெற்றுக்கொள்வது சிறந்தது.

கடந்த வருடம் இக்காலப்பகுதியில் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. நாம் சிறந்த முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். எனினும் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தது. இந்த வருடமும் அவ்வாறே நடப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஏனென்றால் இக்காலப்பகுதியில் மக்கள் அதிகமாக கொள்வனவு செய்வதில் ஈடுபட , வௌியிடங்களுக்குப் பயணிக்க எதிர்பார்த்திருப்பார்கள். கடந்த வருடம் செய்த தவறை மீண்டும் செய்யாமல் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். மக்கள் பொறுப்புடன் நடந்துகொண்டால் இதனைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image