ஏப்ரலில் நியமனக்கடிதம் பெறும் மற்றும் பெறாத பட்டதாரிகள் கவனத்திற்கு
அரச மற்றும் மாகாண அரச சேவையின் கீழ் இதுவரை பெயர் குறிப்பிடப்படாத 01.03.2022 மற்றும் 01.04.2022 ஆகிய தினங்களில் நிரந்தர நியமனம் பெற வேண்டிய பட்டதாரிகள் இருப்பின் அரச நிருவாக அமைச்சிற்கு விஜயம் செய்து அவ்விடயம் தொடர்பில் அரச அதிகாரியொருவருக்கு தெரியப்படுத்துமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் கோரியுள்ளது.
நேற்று (21) ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகத்துடனான கலந்துரையாடலின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் வருமாறு,
பெயர்கள் இடம்பெறாத பயிலுநர் பட்டதாரிகள் குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னர் பெயர் இடம்பெறாமைக்கான காரணம் அல்லது நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கான காரணத்தை அன்றை தினமோ அல்லது சில தினங்களுக்குள் கண்டறிந்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வறிப்பானது இதுவரை எந்தவொரு ஆவணத்திலும் பெயர் இடம்பெறாத, நிரந்தர நியமனம் பெறாத பட்டதாரிகளுக்கான அறிவிப்பாகும்.
01.04.2022ம் அன்று நிரந்தர நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுடைய பெயர் விபரங்கள் இம்மாதம் 28ம் திகதி தொடக்கம் வௌியிடப்படவுள்ளதுடன் மாகாணசபைகளுக்க அந்நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாகாணசபைகளில் வௌியிடப்பட்டுள்ள பெயர்பட்டியலானது இறுதியான பெயர் பட்டியல் அல்ல என்றும் இன்னும் உள்ளடக்கப்படவேண்டிய பட்டதாரிகளின் பெயர்கள் தொடர்ந்தும் மாகாணசபைக்கு அறிவிக்கப்படும்.
ஏதாவது தொழில்நுட்ப காரணத்தினால் அல்லது பட்டதாரிகளின் கட்டுப்பாட்டை மீறி ஏற்படும் பிழை காரணமாக நியமனக் கடிதங்கள் கிடைக்க வேண்டிய தினத்தில் கிடைக்காமல் போகும்பட்டசத்தில் அதன் நியாயத்தன்மை பொறுத்து மீள நியமனக் கடிதங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.