இந்தியாவிடமிருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரதப் பிரமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அவசியமான கோதுமை மா, அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசி பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.