அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள்: அரசாங்கம் விசேட அறிவித்தல்
வருடாந்த இடமாற்ற கட்டளைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற கட்டளைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்தும் மற்றும் பதில் உத்தியோகத்தர்களை விடுவிக்காமல் இருப்பதால் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்பாகவும் திணைக்களங்களிடமிருந்து இதுவரை பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பில் அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம எஸ்.ஆலோக்கபண்டாரவினால், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு கடந்த 11ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முறைப்படி வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தாமை மற்றும் வருடாந்த இடமாற்றங்களை காலநீடிப்பு செய்யுமாறு அல்லது இரத்து செய்யுமாறு கோருவது வருடாந்த இடமாற்ற செயல்முறைக்கு இடையூறாகவும் தவறான முன்னுதாரணமாகும்.
திணைக்களத்தினால் 2021 ஃ 2022 வருடாந்த இடமாற்ற உத்தரவு கிடைத்து ஏதேனும் காரணங்களுக்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த சுற்றறிக்கை கீழே