7ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கான போக்குவரத்து ஏற்பாடு என்ன என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எவ்வாறு போக்குவரத்தை வழங்குவீர்கள் என நாங்கள் அரசாங்கத்தின் அதிகாரிகளிடம் கேட்கின்றோம்.
உயர்தரப் பரீட்சை முடிவடைந்துள்ளது. மறுபக்கத்தில் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெற வேண்டியுள்ளன இந்தநிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மிகவும் பிரச்சினைக்குரிய துன்பமான நிலைமைக்கு மத்தியிலேயே அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தனிப்பட்ட முறையில் அவர்கள் முச்சக்கரவண்டி போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான செலவை செலுத்த வேண்டிய நிலையும் அவர்களுக்கு இருக்கின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என தெரிவித்து நாங்கள் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு நேற்றைய தினம் எழுத்துமூலம் அறிவித்திருந்தோம்.
தலவாக்கலை லோகி தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி
ஏழாம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பமாகவுள்ளன. தூர பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் தாங்கள் சேவையில் ஈடுபடுகின்ற பிரதேசத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என்ற பிரச்சினையில் இருக்கின்றனர். பொதுப்போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர்கள் தங்களுடைய தங்குமிடங்கள் இவ்வாறு செல்வார்கள் என்ற பிரச்சினை இருக்கின்றது,
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவர்கள் எவ்வாறு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொள்வார்கள் என்ற பிரச்சினையும் இருக்கின்றது. எனவே, இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்து இதற்கான மாற்று வழியை எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கல்வி அமைச்சருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தோம்.
இலங்கை போக்குவரத்து சபை உடன் கலந்துரையாடி ஏதாவது ஏற்பாடு ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் இதுவரை ஏற்பாடு செய்யப்பட்டதாக எங்களுக்கு தெரியவில்லை. அந்த நிறுவனங்கள் தரப்பில் நாங்கள் வினவியபோது, தங்களுடன் எந்தவிதமான ஒரு பேச்சுவார்த்தையும் இதுவரை இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது.
எவ்வாறு இருப்பினும் தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் 7ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றம் பணிக்குழாமினர் என அனைவரதும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பது எங்களுடைய கடமையாகும்.
புலம்பெயர் தொழிலாளர் அனுப்பும் டொலருக்கு 240 ரூபா செலுத்துமாறு அமைச்சரவையில் கோரப்படும் - அமைச்சர்
தற்போது நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கின்ற. டொலர் கையிருப்பு இல்லாமல் போயுள்ளது. எரிபொருள், அத்தியாவசிய உணவுகள், மருந்துகள் என்பனவற்றைக் கொண்டு வருவதற்கு முடியாத நிலை இருக்கின்றது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே அறிந்து அதற்கு தீர்வு வழங்குவதற்கு முடியாதவர்களாக இந்த ஆட்சியாளர்கள் உள்ளனர்.
எனவே, எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கும் போது மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய பணிக்குழுவினர் எதிர்நோக்க உள்ள பிரச்சினையை முன்கூட்டியே அறிந்து அதற்கு தீர்வினை வழங்க முடியாத ஆட்சியாளர்களா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது.
இப்படியான சந்தேகம் இருக்கின்ற சந்தர்ப்பத்திலும் இந்த விடயம் தொடர்பில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா உட்பட அரசாங்கத்தின் ஏனைய அதிகாரிகளுக்கும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்
கோவிட் பரவல் காரணமாக, மாணவர்களின் கல்வி பாரியளவில் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. அதனால் அந்த கல்வி நடவடிக்கையை சீராகக் கொண்டு செல்வதற்கு இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையால் ஏற்பட்டிருக்கின்ற போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க தலையீடு செய்ய வேண்டுமென நாங்கள் தெரிவிக்கின்றோம்.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார்.