நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கு தட்டுப்பாடு காரணமாகவும் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதை சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் தலவாக்கலையில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் நேற்று முன்தினம் (05) இரவு 7 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது.
அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் மக்களின் வாழ்வாதாரம் படும் மோசம், உரம் இல்லாததால் தேயிலை பயிர் செய்கை பாதிப்பு, 24 நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத அரசாங்கம் வீட்டுக்கு போ, எரிபொருள் தட்டுப்பாடு மக்கள் நீண்ட வரிசையில் என அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்திய போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதி என்ன?
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபால உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.