புலம்பெயர் தொழிலாளர் அனுப்பும் டொலருக்கு 240 ரூபா செலுத்துமாறு அமைச்சரவையில் கோரப்படும் - அமைச்சர்

புலம்பெயர் தொழிலாளர் அனுப்பும் டொலருக்கு 240 ரூபா செலுத்துமாறு அமைச்சரவையில் கோரப்படும் - அமைச்சர்

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துமாறு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் - சிங்கள புத்தாண்டில், வௌிநாடுகளில் பணியாற்றும் பல இலங்கையர்கள் தங்கள் குடும்பச் செலவுக்காக பணம் அனுப்புவார்கள். குறிப்பாக பண்டிகை செலவுக்காக அதிக பணத்தை அனுப்புவது வழக்கம். "நாட்டில் தற்போதைய டொலர் நெருக்கடியால், பல வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் பணத்தை சட்டவிரோதமாக வீட்டிற்கு அனுப்புகிறார்கள்.

அதன் காரணமாக, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது”. வெளிநாட்டில் வசிக்கும் தொழிலாளர்கள் அனுப்பும் பணற்கு ஒரு டொலருக்கு குறைந்தபட்சம் ஒரு அமெரிக்க டொலருக்கு 240 ரூபா செலுத்தினால், உள்ளூர் வங்கிகள் மூலம் தங்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்புவார்கள். இதனூடாக வௌிநாட்டு இருப்பைப் பாதுகாக்க உதவும் என அமைச்சர் தெரிவித்தார்.

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான அதிகரித்த ஊக்குவிப்புகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய வங்கியின் அறிவித்தல்

 

இதற்குத் தீர்வாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 10 ரூபாவுக்கு மேலதிகமாக 30 ரூபாவை அதிகரித்து வழங்கலாம்.

எனவே, நிதி அமைச்சு அரச வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளுடன் இணைந்து வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் நலனுக்காக டொலர்களை அனுப்புவதற்கு வசதியனை ஒரு முறையான திட்டத்தை உருவாக்குவது அவசியம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image