தலவாக்கலை லோகி தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி
தலவாக்கலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தில் பெண்களுக்கான தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி ஒன்று 05.03.2022 தோட்டத்தின் தேயிலை மலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
குறித்த தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டியில் லோகி பிரிவு, கூம்மூட், நடுப்பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு சுற்றுக்களாக நடத்தப்பட்ட போட்டியில் முதல் சுற்றில் 15 பேரில் 09 பேரும் இரண்டாவது சுற்றில் ஒன்பது பேரிலிருந்து முதலாம்;, இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முதல் சுற்றில் போட்டியிட்ட போட்டியாளர் ஒருவர் கிலோ கிலோகிராம் 20 கிராம் தேயிலை கொழுந்தினை சுமார் 15 நிமிடங்களில் பறித்தனர்.
குறித்த போட்டிகள் தேயிலையி துறையின் எதிர்கால இருப்பினை தக்க வைக்கும் முகமாகவும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவதற்காகவும் உட்சாகப்படுத்துவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தோட்ட முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற குறித்த போட்டி நிகழ்வுக்கு தோட்ட உதவி முகாமையாளர்கள், தோட்ட கள உத்தியோகஸ்த்தர்கள், மனிவள அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.