ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு கிடைக்கவில்லை
ஆட்சேர்க்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை தொடர்பில் ஒன்றிணைத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அரசாங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஒன்றிணைந்த சேவைப் பணிப்பாளர் நாயகத்திற்கு இன்றைய தினம் (21) அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்கவினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்க்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளிளை நிரந்தரமாக்கும் மற்றும் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனிடையே மாகாண அரச சேவை மற்றும் அரச சேவையில் நிரந்தரமாக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏப்ரல் முதலாம் திகதி நிரந்தரமாக்குவதற்குரிய பயிலுநர் பட்டதாரிகளுக்கு உரிய சம்பளம் கிடைக்காத நிலைமை தொடர்பில் அறியக்கிடைக்கிறது.
இதேநேரம், இதுவரையில் நிரந்த்ர நியமனம் அல்லது இணைக்கப்படாத பயிலுநர் பட்டதாரிகள் உள்ளனர் என்பது நீங்கள் அறிந்த விடயமாகும்.
இது தொடர்பான விடயங்களை கலந்துரையாடிய முதலாவது சந்தர்ப்பத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. உங்களினால் இதற்கான கடிதம் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், சம்பளம் மற்றும் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகள் இருக்கின்றமை தொடர்பில் எமது சங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாண கூறுகையில் நிதி இல்லை என்று தெரிவித்துள்ளார் அத்துடன் பெரும்பாலான நிறுவனங்களில் இது தொடர்பில் வினவியபோது நிதியை அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளன.
அத்துடன் சில நிறுவனங்களில் சம்பளம் வழங்கும்போது ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சம்பளத்தை வழங்காமை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பட்டதாரிகள் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
எனவே இதுகுறித்த உங்களது தீவிர அவதானத்தை செலுத்தி, சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் உடனடி தலையீட்டை செய்யுமாறு இதனூடாக கோருகின்றோம். இது தொடர்பில் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை குறித்து எங்களுக்கு அறியப்படுத்துவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். - என்று தெரிவிக்கப்படுள்ளது.