இலங்கை முழுவதும் சுமார் 9,000 கிராம சேவகர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று உள்விவகார அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார்.
இதனால் ஒரு அதிகாரி பல கிராம சேவகர் பிரிவுகளை உள்வாங்கி பணியாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக பரீட்சைகள் திணைக்களத்தின் பணிச்சுமை காரணமாக கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கான திகதியை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும ஜூலை மாதமளவில் போட்டிப்பரீட்சை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக போட்டிப்பரீட்சை தாமதமாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிகாட்டினார்.