மருத்துவம், அதனுடன் தொடர்புகள் அத்தியவசிய சேவைகளாக அறிவிப்பு

மருத்துவம், அதனுடன் தொடர்புகள் அத்தியவசிய சேவைகளாக அறிவிப்பு

மருத்துவமனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளி பராமரிப்பு மற்றும் மின்சாரம் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்சார விநியோகம், நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் பராமரிப்பு, போஷாக்கு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைப் பணிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 சுகாதாரத்துறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அரச சுகாதார ஊழியர்கள்

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image