நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினை சமாளிக்கும் அளவுக்கு சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் உட்பட அனைத்து தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை என்றுதேசிய தொழிலாளர் ஆலோசனை சபை அங்கத்தவரும் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் தலைவருமான அன்டன் மார்க்கஸ் தெரிவித்துள்ளார் .
இந்த பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு உடனடியாக பொருள் மற்றும் சேலை விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் பொருப்பை வர்த்தகர்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அதனால் தனியார்துறை ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானமுடையவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் மற்றும் பொருளாதார பிரச்சினையை காரணமாக காட்டி தொழில் வழங்குநர்கள் .ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் தப்பி வருகின்றனர். இது தொடர்பில் அரசாங்கமும் தனது கடமைப் பொறுப்பில் இருந்து தவறியுள்ளது. இந்நிலையில் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து சமூக செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டியது இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானதாகும்.
அத்துடன் சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் உட்பட தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறைந்த வருமானம் உடையவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க திட்டமொன்றை உடனடியாக தயாரிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் எதிர்காலத்தில் போராட்டத்தில் ஈடுபடவேண்டியேற்படும் என்றும் அன்டன் மார்க்கஸ் மேலும் தெரிவித்தார்.