அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனத்திற்கான போராட்டம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒரே தடவையில் நிரந்தர ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொள்வதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடையே தகுதியுடைய மற்றும் விருப்பமுள்ள உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்த்தல்.
ஆட்சேர்க்கும் அதிஉச்ச வயதில்லை நிபந்தனையை நீக்குதல்.
ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்த்தல்.
கல்வி அமைச்சின் 2021/12/31ஆம் திகதி கடிதத்தின் ஒன்பதாம் சரத்து தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், அதனைத் தவிர்த்து 2018 - 2020 பட்டதாரி பிரிவினர்களுக்கு வழங்குவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள 22,000 ஆசிரியர் நியமனங்களை, தற்காலிக ஆசிரியர் நியமனங்களுக்கு பதிலாக நிரந்தர ஆசிரியர் நியமனமாக ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளல்.
முதலான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 19ஆம் திகதி இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.