போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடல் வெற்றியளித்ததையடுத்து தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (29) தொடக்கம் வழமையான போக்குவரத்து நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்ற போதிலும் அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படாது என்றும் அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தமது 25 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், நாளை தொடக்கம் பயணச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்றும் இரு தினங்களுக்குள் பயணிகளுக்கு அவசியமான ரயில்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.