பயிலுநர் நியமனங்களில் அரசியல் தலையீடு? அறியப்படுத்த தொலைபேசி இலக்கம்

பயிலுநர் நியமனங்களில் அரசியல் தலையீடு? அறியப்படுத்த தொலைபேசி இலக்கம்

அரசியல்வாதிகளின் தொடர்புகளின் அடிப்படையில் நியமனங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையத்தின் பிரதான செயலாளர் சந்ததன சூரிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நியமனம் வழங்கப்படுகின்றபோது அரசியல்வாதிகளின் தொடர்புகளின் அடிப்படையில் கடிதங்களை அனுப்பி அரச சேவைகள் அமைச்சின் மூலமாக தமக்கு இலகுவான பணியிடத்திற்கு கடிதத்தை தயார் செய்துகொள்ளும் செயற்பாடும் இடம்பெறுவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நாங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றோம்.

அரசியல்வாதிகளின் தொடர்புகளின் அடிப்படையில் இவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிராகவும், அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுவதற்கு எவராவது ஒருவர் செயற்படுவாராயின் அதற்கு எதிராகவும் நாங்கள் தலையீடு செய்வோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

இது தொடர்பில் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுமாயின், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் 0718178268 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு உங்களுடைய பிரச்சினைகளை அனுப்பி வையுங்கள்.

குறிப்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் என்ற அடிப்படையில் பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் நாம் ஆரம்ப முதல் தலையீடு செய்து கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image