தங்களுக்கான நியமனத்தை வழங்குமாறுகோரி மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 15 ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் என்றும், அதற்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் திடீரென அந்த நியமனம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டது
இந்த நிலையில், தங்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"தகுதியில் இருந்தும் நிரந்தர நியமனம் வழங்காது உதவி ஆசிரியர்களை அடிமைகளாக்கியுள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்கு"
"எங்களின் நியமனம் நிரந்தரமாக்கப்படாமைக்கான காரணம் யாது?"
என்றவாறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
380 உதவி ஆசிரியர்களுக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளதாக மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா 198
கண்டி 17
மாத்தளை 5
சிங்கள மொழிமூலமானோர் 54
உட்பட 380 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.