ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரித்தல்: மேன்முறையீட்டுக் காலம் நீடிப்பு
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கும் வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரி கல்வி அமைச்சுக்கு மேன்முறையீடு செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த மேன்முறையீ்டுக்கான காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தங்கள் கையால் எழுதப்பட்ட மேன்முறையீட்டை முன்வைக்குமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.
அந்த மேன்முறையீட்டு விண்ணப்பத்தில்,
முகவரி
செயலாளர்
கல்வி அமைச்சு
இசுருபய
பெலவத்த
பிரதிகள்
செயலாளர்
அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்
இலக்கம் 49/53 பி
சல்மல் உயன வீதி
யக்கல.
என்று குறிப்பிட வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.